உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

கோடை விடுமுறைக்குள் ரயில்வே சுரங்கப்பாதை பணி : அனைத்து குடியிருப்போர் சங்கம் கலெக்டருக்கு மனு

கடலூர் :

                கடலூர் சுரங்கப் பாதை பணியை கோடை விடுமுறைக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என  அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
 
இது குறித்து சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

              கடலூர் லாரன்ஸ் ரோடு சுரங்கப்பாதை திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்  பணியை துரிதப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கடலூரில் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக போக்குவரத்து துறை, போலீஸ், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளை  கூட்டி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளையும், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைதுறை ஒப்பந்த பணிகளை விரைவு படுத்த வேண்டும். மேலும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக கூட்டமைப்பின் ஆலோசனையாக, கடலூர் ஜவான்பவன்-கம்மியம்பேட்டை சாலை பணிகள் கிடைப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு உரிய நிதியை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்யாததால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சாலையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ரயில்வே மேம்பாலத்திலிருந்து சரவணா நகர் வழியாக நத்தவெளி இணைப்பு சாலை பணியை நகராட்சி நிர்வாகம் தாமதித்து வருகிறது. சரவணா நகர் அருகே 300 மீட்டர் நீளத்திற்கு இடத்தை ஆர்ஜிதம் செய்ய சென்னை நகராட்சி இயக்குனர் அனுமதி அளித்துள்ள நிலையில், உடன் நில ஆர்ஜிதம் செய்து சரவணா நகர் இணைப்பு சாலை பணியை துரிதப்படுத்த வேண் டும். கோடை விடுமுறைக்குள் ரயில்வே சுரங்கப்பாதை பணியை ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior