காட்டுமன்னார்கோவில் :
காட்டுமன்னார்கோவிலில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு மூன்றாம் கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் சமூக நல தாசில்தார் ராமச்சந்திரன் கூறுகையில்:
காட்டுமன்னார்கோவில் பகுதியில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு இதுவரை 64 ஆயிரத்து 70 பேருக்கு புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் 32 ஆயிரத்து 700 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக 9 ஆயிரத்து 396 அடையாள அட்டை வந்துள்ளது. அடையாள அட்டைகள் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். அடையாள அட்டை கிடைக்காதவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று பெற்று கொள்ளலாம். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மூன்றாம் கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி பழைய தாசில்தார் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இன்னும் புகைப்படம் எடுக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக