உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

இடியும் நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் : புதிய அலுவலகம் கட்டித்தர கலெக்டருக்கு கோரிக்கை

பரங்கிப்பேட்டை : 

                     பரங்கிப்பேட்டை அருகே இடிந்துவிழும் நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
                  பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கிராமத்தில் 25 ஆண்டிற்கு முன் குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி, 22 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் இங்கு வந்து செல்வார்கள். அதனால் வருவாய் ஆய்வாளர் குடும்பத்துடன் இங்கே தங்கி பணிசெய்து வந்தார். இதனால் கிராமத்தில் இருந்து வரும் சாதாரண பொதுமக்கள் கூட தெரிந்துகொள்ளும் வகையில் வருவாய் ஆய்வாளர் இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து அலுவலக பலகையில் எழுதப்பட்டு இருக்கும்.
 
                     கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் அலுவலக கட்டடம் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால் மழைக் காலங்களில் கட்டடத்தின் உள்ளே தண்ணீர் ஒழுகியதால் அப்போது இருந்த வருவாய் ஆய்வாளர் குடியிருப்பை காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் தங்கினார். அலுவலகம் மட்டும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டடத்தின் விரிசல் அதிகமாகி எப் போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலை ஏற்பட்டது. இதனால் வருவாய் ஆய்வாளரை பார்க்கவரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து சென்றனர்.
 
                    தற்போது கிராம நிர்வாக அலுவலகத்திலேயே வருவாய் ஆய்வாளரும் தங்கி பணி செய்து வருகிறார். இதனால் வருவாய் ஆய்வாளர் இருக்கிறாரா, இல்லையா என்பது பலருக்கு தெரியவில்லை.  பொதுமக்கள் நலன் கருதி இடிந்துவிழும் நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்டித்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior