உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மே 17ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்


General India news in detail
                        எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு, மே மாதம் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங், வரும் ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை நடக்கிறது.

                   தமிழகத்தில் சென்னை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், மதுரை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், தேனி, தர்மபுரி ஆகிய 15 இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1,745 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படும் 262 இடங்கள் போக, மீதமுள்ள 1,483 இடங்கள் தமிழக அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. பெருந்துறை ஐ.ஆர்.டி., கோவை பி.எஸ்.ஜி., ஸ்ரீமூகாம்பிகா, ஆதிபராசக்தி, கற்பக விநாயகா ஆகிய ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 348 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 15 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,270 இடங்களில், 778 பி.டி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன.

சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நேற்று கூறியதாவது:  

               தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், 2010 - 11ம் ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் மே மாதம்17ம் தேதி முதல் 27ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 7ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்படும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 11ம் தேதி வெளியிடப்படும்.முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங் ஜூன் 21ம் தேதி துவங்கி, ஜூலை 7ம் தேதி முடிவடையும். முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் ஜூலை 21ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். திருவாரூர், விழுப்புரம் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். எம்.சி.ஐ., ஆய்வில் சிறிய அளவிலான குறைகள் சுட்டிக் காட்டப்பட்டன. அவை சரிசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

                 இந்த ஆண்டு புதிதாக இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எம்.சி.ஐ., அனுமதி கிடைக்கக்கூடும் என்றும், அதன் மூலமாகவும் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.பி.டி., ஆகிய மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு, மே மாதம் 16ம் தேதி வெளியிடப்படுகிறது. இப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இப்படிப்பிற்கான கவுன்சிலிங் ஜூலை 5ம் தேதி முதல் நடக்கவுள்ளது.
 
மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தேதி விவரம்:

மருத்துவம்/பல் மருத்துவம் மருத்துவம் சார்ந்த படிப்புகள்

  • மாணவர் சேர்க்கை அறிவிப்பு மே 16 மே 16
  • விண்ணப்பம் விற்பனை துவங்கும் நாள் மே 17 ஜூன் 7
  • விண்ணப்பம் விற்பனை கடைசி நாள் மே 27 ஜூன் 15
  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மே 27 ஜூன் 15
  • ரேண்டம் எண் வழங்கப்படும் நாள் ஜூன் 7 ஜூன் 21
  • தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் நாள் ஜூன் 11 ஜூன் 25
  • முதற்கட்ட கவுன்சிலிங் துவங்கும் நாள் ஜூன் 21 ஜூலை 5
  • முதற்கட்ட கவுன்சிலிங் கடைசி நாள் ஜூலை 7
  • முதற்கட்ட கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்பட்டவர்கள் கல்லூரியில் சேரும் நாள் ஜூலை 21

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior