உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

சாலையோரத்தில் கட்டில், சோபா செட் கடலூரில் விற்பனை 'படுஜோர்'

 கடலூர்: 

                     ஷோரூம்'களில் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வரும் கட்டில், சோபா செட்டுகள் கடலூரில் சாலையோரம் விற்பனை செய்யப்படுகிறது. மரத்தினால் ஆன கட்டில், பீரோ, மேஜை, நாற்காலிகள், சோபா செட்டுகள் என்றுமே மவுசு குறையாமல் இருந்து வருகிறது. மரப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இரும்பினாலான பொருட்கள் அந்த இடங்களை பிடித்து வந்தன.தற்போது மரப் பொருட்களில் அழகுமிகு வேலைபாடுகளுடன் வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளதால். மீண்டும் மரப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு ஏற்பட்டு, விலை அதிகம் என்றாலும் வாங்கி வருகின்றனர்.கட்டில்,சோபா செட், பீரோ, 'டிவி' ஸ்டாண்ட் என பளபளக்கும் கண் ணாடி '÷ஷாரூம்'களில், விளம்பரங் கள் மூலம் இது போன்று பொருட் கள் அதிகளவு விற்பனை செய்யப் பட்டு வருகிறது. மேலும் அவர்கள் சொல்லும் விலைதான் என்ற நிலையும் உள்ளது. வியாபார யுத்தி இல்லாமல் பிழைப்பிற்காக மரக் கட்டில், சோபா செட்டுகள் என சாலையோரம் கடை விரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவர்களிடம் பேரம் பேசியும் வாங்க முடிகிறது என்பதால் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கடலூர் கலெக்டர் அலுவலக சாலையில் கர்நாடகா மாநிலம் சிக்மகளூரிலிருந்து கொண்டு வரப்பட்ட நாட்டு தேக்கினால் செய்யப்பட்ட கட்டில், சோபா செட் படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கட்டில்கள் 13 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், சோபா செட்டுகள் 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior