சிதம்பரம்:
வீராணம் ஏரியில் மீன் வளத்தை பெருக்க மீன் வளத்துறை சார்பில் கெண்டை மீன் குஞ்சுகள் விடப்பட்டுது. வீராணம் ஏரி சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ளது. சென்னைக்கும் இங் கிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. சென்னைக்கு தண்ணீர் செல்வதால் ஏரி வற்றாமல் தண் ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நீர்மட்ட அளவுப்படி 43.5 அடி தண் ணீர் உள்ளது. ஏரியில் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு மே, ஜூன் மாதங்களில் மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வீராணம் ஏரியில் தண்ணீர் வற்றாமல் இருப்பதால் மீன் வளத்தை பெருக்க தமிழக மீன் வளத் துறை சார்பில் மீன் குஞ்சுகள் விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை மீன் வளத்துறை உதவி இயக்குனர் தில்லை கோவிந்தன் தலைமையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சாதா கெண்டை மீன்கள் விடப்பட்டது. நிகழ்ச்சியில் சிதம்பரம் உதவி இயக்குனர் கலியமூர்த்தி, மீன் ஆய்வாளர்கள் மனுநீதி சோழன் உள்ளிடோர் பங்கேற்றனர்.