உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

நெடுஞ்சாலை குறுக்கே பழமையான மரம்விபத்தினை எதிர்நோக்கும் வாகன ஓட்டிகள்


திட்டக்குடி:

                     இறையூர் ரயில்வே கேட் அருகில் நெடுஞ்சாலையின் குறுக்கே விபத்தினை எதிர்நோக்கி காத்திருக்கும் பழமையான மரத்தினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக் கும் பணி 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், துவங்கி நடந்து வருகிறது.

               இப்பணிக்காக வாகனங்கள் கிராமங்களுக்குள் செல்லும் ஒருவழிப்பாதையும், பணி நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே ஒரு வழியுமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பணி நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே நெடுஞ்சாலையில் அம்பிகா சர்க்கரை ஆலை பக்கவாட்டு நுழைவாயிலின் முன் பழமையான மரம் ஒன்று கிளைகள் வெட் டப்பட்ட நிலையில் நிற்கிறது. போக்குவரத்து மாற்றம் செய்யப்படாத நிலையில் வாகன ஓட்டிகள் மரத் தினை மையமாக வைத்தே இருபுறமும் மாறி செல் கின்றனர். சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிய டிராக்டர்கள் நுழையும் போது மரத்தினை மையமாக வைத்து செல்லும் வாகனங்கள் ஒருபுறம் பழுதடைந்த தார் சாலை, மறுபுறம் குண்டும், குழியுமான மண் சாலையில் சிக்கி எதிரே நிற்கும் மரத்தில் மோதும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

                எனவே நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில், கிளைகள் வெட்டப்பட்டு எலும்பு கூடாக காட்சியளிக்கும் பழமையான மரத் தினை விபத்து ஏற்படும் முன் வருவாய்த் துறையினர் அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior