கிள்ளை:
சிதம்பரம் அருகே அ. மண்டபத்தில் இருந்து கிள்ளை பிச்சாவரம் வரை சாலை அபிவிருத்தி திட் டத்தின் மூலம் நடக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சிதம்பரம் அருகே அ.மண்டபத்தில் இருந்து கிள்ளை, பிச்சாவரம் வரை சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாலையை அகலப்படுத்தி வடிகால் கட்ட 2 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 2009 மே மாதம் பணிகள் துவங்கியது. பணிகளை விரைந்து முடிக்காததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதுடன், விபத்தும் அதிகரித்து வந்தது.அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சீனுவாசன், உதவி பொறியாளர்கள் பழனிவேல், தன்ராஜ், கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் சாலை அகலப்படுத்த தோண்டிய பள்ளத்தில் நிரப்பப்படும், ஜல்லியின் அளவு மற்றும் தரம், அகலப்படுத்தப்படும் அளவு குறித்து அளந்தும், வடிகால் குறித்தும் ஆய்வு செய்தனர்.