உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

விடைத்தாள் மாயத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள்

 நெய்வேலி:

                நெய்வேலி அருகே பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமாவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  அஞ்சல் துறையில் ஏற்படும் கோளாறே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் பிளஸ் 2 தேர்வெழுதிய 262 மாணவர்களின் விடைத்தாள்கள் அஞ்சல்துறை மூலம் தேர்வுத்தாள் திருத்தம் மையத்துக்கு  அனுப்பிவைக்கப்படும் போது அவை மாயமாகியுள்ளன. விடைத்தாள் திருத்தும் மையத்திலிருந்து பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோதுதான், இவை காணாமல்போன விவரம் தெரியவந்தது. இதுகுறித்து அஞ்சல் துறையிடம் விசாரித்தபோது, விடைத்தாள்கள் எங்கு போனது என்றே தெரியாமல் அவர்கள் விழித்துள்ளனர்.÷இதுகுறித்து சட்டப்பேரவையில், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, விடைத்தாள்கள் காணாமல் போன மாணவர்களுக்கு இம் மாதம் 22-ம் தேதி மீண்டும் தேர்வு வைக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கூறியுள்ளார்.

                இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் 10-ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கும்போது அவை காணாமல் போயின. பின்னர் 8 நாள்களுக்குப் பிறகு ஒரு பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் அவை உரிய தேர்வுத்தாள் திருத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல் தஞ்சையில் பஸ் நிலையத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் விசாரணைக்குப் பின் உரிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முசிறியைச் சேர்ந்த 262 மாணவர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை மறுதேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.÷பொதுத்தேர்வு முடிந்து கோடையை அனுபவிக்கலாம் என்றிருந்த மாணவர்களின் மனதில் தற்போது ஒருவித அச்சம் நிலவுகிறது. மேலும் முன்பு தேர்வெழுதிய அதே மனநிலையில் அம்  மாணவர்கள் இருப்பார்களா என்பதும் சந்தேகமே. மேலும் ஏப்ரல் 21-ம் தேதியுடன் விடைத்தாள் திருத்தும் பணி முடிகிறது. இந்நிலையில் 262 மாணவர்களின் தேர்வுத்தாளை திருத்துவதெற்கென ஆசிரியர்களை நியமித்தாக வேண்டும். மேலும் தனியே வினாத் தாள், விடைத் தாள் தயாரிப்பு என அரசுக்கு தேவையற்ற செலவுகள். தகவல் தொழில்நுட்பப் புரட்சி காரணமாக மக்களிடையே கடிதப் போக்குவரத்து வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் அஞ்சல்துறை, தனியார் கூரியர் நிறுவனங்களின் போட்டியை சமாளித்தாக வேண்டிய நிலையில் உள்ளன. இந்நிலையில் அஞ்சல் துறை மக்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்குவது அத்துறைக்கு நல்லதல்ல என்றே படுகிறது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior