உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

நகராட்சி அலுவலகத்தில் பாம்பு?பூட்டி கிடக்கும் ஆவண காப்பக அறை

 பண்ருட்டி: 

                  பண்ருட்டி நகராட்சி அலுவலக ஆவண காப்பக அறையில் பாம்பு இருப்பதாக கிளம்பிய பீதியைத் தொடர்ந்து அந்த அறை கடந்த ஒரு மாதமாக பூட்டியே கிடக்கிறது. பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து சாரை, நல்ல பாம்புகள், கருநாக பாம்பு என வரிசையாக படையெடுப்பது சகஜமான ஒன்று. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அலுவலகம் பின்புறம் உள்ள மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி, மூலிகை தோட்டம், ஆவண காப்பக அறை பகுதிகளுக்கு ஊழியர்கள் செல்வது கிடையாது. கடந்த ஆண்டு பதிவேடுகள் உள்ள இடத்தில் பாம்புகள் இருந்தது. இதனை அப்போது ஊழியர்கள் அடித்து சாகடித்தனர். பின் நகராட்சி அலுவலகம் முன் உள்ள பூங்கா போன்ற புல் செடிகளில் உள்ள புதர்களில் கருநாகபாம்பு இருப்பதாக பீதி கிளம்பியது. இதனையடுத்து கடந்த ஆண்டு நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பாம்பு கடிக்கான மருந்துகள், உடனடி சிகிச்சை அளிக்க 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தனர். இந்நிலையில் கடந்த மாதம் மாடியில் உள்ள ஆவண காப்பகத்தின் உள்ளே நல்ல பாம்புகள் இருந்ததைக் கண்ட பணி மேற்பார்வையாளர் சாம்பசிவம் உள்ளிட்ட ஊழியர்கள் அவைகளை அகற் றினர். இதனால் கடந்த ஒரு மாதமாக நகராட்சி ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் ஆவண காப்பக அறை பக்கமே யாரும் செல்வதில்லை.அதிகாரிகள் பாம்பு பிடிப்பவர்கள் மூலம் பாம்புகளை பிடிக்க ஏற்பாடு செய்யாமல் அலட்சியமாக இருப்பதால் பணிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior