உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

தானியங்கி இயந்திரம் மூலம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு: பிரிகேடியர் தகவல்

 கடலூர்:

              இந்திய ராணுவத்திற்கு அடுத்த ஆண்டு முதல், தானியங்கி இயந்திரம் மூலம் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும்' என, ராணுவ பிரிகேடியர் பங்கஜ் சின்கா கூறினார். 

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்து வரும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமை பார்வையிட்ட ராணுவ பிரிகேடியர் பங்கஜ் சின்கா நேற்று கூறியதாவது:

                  ஆள் சேர்ப்பு முகாமுக்கு ஏராளமான இளைஞர்கள் வந்துள்ளனர். நாட்டு மக்களின் ஜனத்தொகையை அடிப்படையாகக் கொண்டு, ராணுவத்தில் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன்படி ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் ஆகிய பகுதிகளில், 13.7 சதவீதம் காலிப் பணியிடம் உள்ளது. அதில், தமிழகத்தில் மட்டும் 7 சவீதம் உள்ளது. தேவை ஏற்படும் போது காலிப் பணியிடங்களை அதிகரித்துக் கொள்ளலாம்.கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் ராணுவத்தில் சேருகின்றனர். நேற்று நடந்த முகாமில் சென்னையில் இருந்து 120 பேரும், வேலூர் 2,130, புதுச்சேரி 30, திருவள்ளூரில் 298 பேரும் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு, மெடிக்கல், எழுத்துத் தேர்வு போன்றவைகள் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் உடனே பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

                  எழுத்துத் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே எழுத அனுமதிக்கப்படும் .இங்கு நடத்தப்படும் ஆள் சேர்ப்பு முகாம் கடைசியாக இருக்கும்.அடுத்து, ஆந்திராவில் உள்ள வாராங்கல் மாவட்டத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படும். அதேபோல், அடுத்த ஆண்டு முதல் எழுத்துத் தேர்வும் ஆன்-லைனில் எழுதலாம். தற்போது ராணுவத்தில் பெண்கள், நர்சிங், மெடிக்கல், அதிகாரிகள் அளவில் தான் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். மற்ற பிரிவுகளில் இதுவரை சேர்க்கப்படவில்லை.ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு தொடர்பாக யாராவது பணம் கேட்டால், கொடுத்து ஏமாற வேண்டாம். அவ்வாறு யாரேனும் அணுகினால் போலீசாரிடமோ, எங்களிடமோ தெரிவிக்கலாம். இவ்வாறு பிரிகேடியர் பங்கஜ் சின்கா கூறினார். இயக்குனர் துஷார் பகாய் உடனிருந்தார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior