உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

நிர்வாணமாக திரியும் மனநலம் பாதித்தவர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கடலூர்: 

                      அரை நிர்வாணமாக ரோட்டில் திரியும் மன நலம் பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் நகர பகுதிகளில் அழுக்கேறிய உடல், கிழிந்த உடை, பரட்டை தலையுடன் சாலையில் திரிந்து கொண்டிருக்கும் மனநலம் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களின் குடும்ப சூழ்நிலையால் மனநிலை பாதித்து, குடும்ப உறுப்பினர்களாலேயே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு அனாதைகளாக ரோட்டில் கிடப்பதை சாப்பிட்டு நடை பிணமாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு கடலூரில் மருத்துவமனை சாலையில் சுற்றித் திரியும் மனநிலை பாதித்த நபர் ஒருவர் கடந்த சில வாரங்களாக அழுக்கேறிய சட்டை மட்டும் அணிந்துக் கொண்டு, இடுப்பிற்கு கீழே உடையேதுமின்றி நிர்வாணமாக தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பிளாட் பாரத்தில் நின்று கொண்டிருக்கிறார். இச்சாலை வழியே செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நடந்து செல்லும் பெண்கள் முகம் சுளித்தபடி செல்வது வேதனையாக உள்ளது. அதே போன்று கலெக்டர் அலுவலகம் முன்பாக மற்றொரு மனநிலை பாதித்த நபர் கையில் பேண்டை பிடித்தபடி நடந்து செல்வதும், பின்னர் கழற்றிக் கொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். பொது இடத்தில் அரை நிர்வாண கோலத்தில் சுற்றித் திரியும் மனநிலை பாதித்தவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior