நெய்வேலி:
என்.எல்.சி., தொழிலாளர்களின் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் அமைவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. என்.எல்.சி., நிறுவனத்தில் பணி செய்து வரும் 18 ஆயிரத்து 303 நிரந்தர பணியாளர்களில் 4,017 இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு அதன்படி தற்போது அவர்களுக்கு மட்டும் புதிய ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மீதமுள்ள 14 ஆயிரத்து 286 தொழிலா ளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. 7 ஆயிரத்து 594 உறுப்பினர்களை கொண்ட தொ.மு.ச.,வும், 2 ஆயிரத்து 817 உறுப்பினர்களை கொண்ட பா.தொ.ச.,வும் என்.எல். சி., நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவினருடன் தொடர்ந்து நடத்தி வரும் ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.இருப்பினும் என்.எல்.சி., நிர்வாகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் மத்தியில் பரவி வருகிறது. எனவே, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் தற்போதைய பேச்சுவார்த்தை குறித்த நிலவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
download this page as pdf