உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

கேட்டதும் நிதி வழங்கப்படும்: ஆட்சியர்

 கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் கோடைக் காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்த உடனேயே, போதிய நிதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். 

                 கடலூர் மாவட்டத்தில் கோடைக் காலத்தில் ஏற்படும் குடிநீóர் பிரச்னைகள் தவிர்க்க முடியாதது. கடலோரப் பகுதிகளில் மழைக்காலத்தில் 18 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் கோடைக்காலம் நெருங்கி விட்டால் மேல்மட்ட நிலத்தடி நீர் வறண்டு விடுகிறது. பின்னர் 600 அடி ஆழத்துக்கு ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்தால்தான் குடிநீர் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. ஒரு ஆழ்குழாய்க் கிணறு அமைக்க ரூ.4.5 லட்சம் வரை செலவு ஆகிறது. அடுத்து என்.எல்.சி. சுரங்கங்களால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடுகிறது. மேலும் என்.எல்.சி. சுரங்கங்கள் தோண்ட வெடி வைக்கப்படுகிறது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகள் அதிர்வுக்கு உள்ளாகி, தூர்ந்துவிடுகின்றன. நீர்மூழ்கி மோட்டார்களைக்கூட வெளியே எடுக்க முடிவதில்லை. இதனால் மோட்டார்களையாவது காப்பாற்றும் வகையில், 8 அங்குல  குழாய்களுக்குள் 6 அங்குல நீர்மூழ்கி மோட்டார்களை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கி இருக்கிறோம். என்.எல்.சி. சுரங்கங்களால் திட்டக்குடி, மங்களூர், நல்லூர், விருத்தாசலம் வட்டாரங்களில் பெண்ணாடம் வரை நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. எனவே என்.எல்.சி மூலம் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி இருக்கிறோம். கோடைக் காலத்தில் குடிநீர் பாதிப்பு குறித்து முதல் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அண்மையில் தகவல் கோரினர். கடலூர் மாவட்டத் தேவை குறித்து திட்டம் தயாரித்து அனுப்பி இருக்கிறோம். மாவட்ட ஆட்சியரின் சுய விருப்ப நிதியில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் நிதி வழங்க அரசு உத்தரவிட்டு இருக்கிறது. எனவே கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்ததும் உடனடியாகவே நிதி வழங்க பரிந்துரைக்கப்படும் என்றார் ஆட்சியர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior