உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதி

நெல்லிக்குப்பம்: 

                நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனைக்கு டாக்டர் சரியாக வராததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் ஒரு டாக்டர், மருந்தாளுனர், செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். ஏழை மக்கள் அதிகளவு வசிக்கும் பகுதி என்பதால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் நகராட்சி மருத்துவமனைக்கு அதிகளவு நோயாளிகள் வருகின்றனர். பின் தங்கிய நகராட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் கருதி டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் மருந்துகளுக்கு மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த மருத்துவமனை பகலில் மட்டுமே இயங்கும்.இங்கு பணிபுரியும் டாக்டர் காலையில் மட்டும் வருகிறார். பெரும்பாலும் மதிய நேரத்தில் வருவதே இல்லை. இதனால் நோயாளிகள் சிரமத்துடன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. டாக்டர் சரியாக வராததால் செவிலியர்களும் அலட்சியமாக உள்ளனர். நகராட்சி மருத்துவமனையை ஏழை எளியோர்களுக்கு பயன்படும்படி 24 மணி நேரம் செயல்படும் அரசு மருத்துவமனையாக மாற்றினால் நல்லது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior