கடலூர்:
கடலூர் நகராட்சி சுகாதார அதிகாரி பணியிடம் காலியாக உள்ளதால் கடலூரில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் சுகாதார அதிகாரியாக இருந்தவர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த பணியிடம் காலியாக உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேல் காலியாக உள்ளதால். சுகாதார அதிகாரியின் கீழ் இயங்கும் நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது தமிழகம் முழுவதும் போலியான உணவு பொருட்கள், காலாவதியான உணவு பண்டங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு பல நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் இந்த பணி அடிக்கடி நடத்தப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கடலூர் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள், சைவ, அசைவ ஓட்டல்கள் அதிகம் இருந்தும் இரண்டு நாட்களில் பெயரளவிற்கு ஆய்வு நடத்தப்பட்டு, 60 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக காலாவதி உணவு பொருட்கள் அழிக்கப்பட்டது .தற்போது பள்ளி சேர்க்கை நேரம் என்பதால் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டிய சுகாதார அதிகாரி இல்லாததால், சான்றிதழ் பெருவதில் காலதாமதம் ஏற்பட் டுகிறது. மேலும் சுகாதா ரம் தொடர்பான பல பணிகள் ஆய்வு செய்ய அதிகாரி இல்லாததால் பணிகள் மந்தமாக நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக