உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

மக்களை கடனாளியாக்கிவிட்டார் கருணாநிதி : எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன்

சிதம்பரம்: 

                   தேவையில்லாத திட்டங்களை கொண்டுவந்து தமிழக மக்களை கடனாளியாக்கிவிட்டார் கருணாநிதி என எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் பேசினார். தி.மு.க., அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் மாவட்ட பிரதிநிதி மணிவேலன், சின்னக் கடைத் தெருவில் வார்டு செயலாளர் ரமேஷ், தெற்கு சன்னிதியில் வார்டு செயலாளர் வேம்பு, கீழ சன்னதியில் சிவராம தீட்சிதர் தலைமையில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில் மாவட்ட செயலாளரான எம்.எல்.ஏ., அருண் மொழித்தேவன் பேசியதாவது:

                 தமிழகத்தில் நடந்துவரும் தி.மு.க., ஆட்சியில் மின்வெட்டு, விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையில்லாத திட்டங்களை கொண்டு வந்து ஒரு லட்சம் கோடி கடனை ஏற்படுத்தி ஒவ்வொருவரும் 15,000 ரூபாய் கடனாளியாக்கி இருக்கிறார் கருணாநிதி. நாட்டு மக்களின் பிரச்னைகள் தீர்க்க முடியாத நிலையில் மேலவை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஜெ., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மணல் விற்பனையும், டாஸ்மாக் கடையும்தான் இன்று நாட்டை காப்பாற்றி வருகிறது. இல்லையென்றால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். சாக்லேட் கொடுத்து பிள்ளை பிடிப்பதுபோல் யார், யாரையோ கட்சியில் சேர்த்துக்கொண்டு அ.தி.மு.க.,வை உடைத்துவிட்டோம் என மாய தோற்றத்தை ஏற்படுத்துவதால் ஜெ., வையோ கட்சியையோ ஒன்றும் செய்துவிட முடியாது. வரும் தேர்தலில் மக்கள் கண்டிப்பாக கருணாநிதிக்கு பாடம் புகட்டுவார்கள் என பேசினார். கூட்டத்தில், எம்.எல்,ஏ. செல்வி ராமஜெயம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் தோப்பு சுந்தர், தலைமை நிலைய பேச்சாளர் முருகுமணி, ஜெ., பேரவை மாரிமுத்து, முன்னாள் நகர செயலாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற் றனர். எம்.ஜி.ஆர்., இளைஞரணி ராபர்ட் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior