உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

காட்டுமன்னார்கோவில் சிவன் கோவில் புனித குளம் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்

சிதம்பரம்: 

                  சிவன் கோவில் குளம் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே 9 ஏக்கர் பரப்பளவில் விஸ்தாரமான குளம் உள்ளது. சுண்ணாம்பு குளம் என்று அழைக்கப்படும் இக்குளம் உடையார்குடி அனந்தீஸ்வரன் கோவில் குளமாகும். புனித குளம் தற்போது துர்நாற்றம் வீசும் கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது. ஆரம்ப காலத்தில் தெப்போற்சவம் நடத்தப்பட்டது. குளத்தை சுத்தப்படுத்தி படகு சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்கிடையே மீன்வளத்துறை சார்பில் மீன் வளர்த்தும், மீன் குஞ்சு பொறிப்பகமாகவும் பயன்படுத்தியது. நகர வளர்ச்சிக்கேற்ப இயற்கை வளங்கள் சீரழிக்கப்படுவதற்கு உதாரணமாக இந்த குளத்தையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளும் வகையில், குளத்தை சுற்றிலும் கட்டடங்கள் உருவாகியதும், வீடுகள் கட்டப்பட்டும் அதன் கழிவுநீர் இக்குளத்தில் விடப்பட்டு வருகிறது. காட்டுமன்னார்கோவில் நகர கழிவுநீர் கூட அந்த குளத்தில்தான் கலக்கிறது. பஸ் நிலைய கழிவுகள் மற்றும் பல ஓட்டல்கள், வியாபார ஸ்தபானங்களின் கழிவுகள்கூட இந்த குளத்தில்தான் கொட்டப்படுகிறது. குளத்தில் தண்ணீர் வெளியேற்றப்படாமலும், கழிவுநீர் கலப்பதாலும் தண்ணீரின் வெண்மை நிறம் மாறி பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. துர்நாற்றம் பஸ் நிலையத்தில் நிற்க முடியாத அளவிற்கு உள்ளது. எனவே குளத்தில் கழிவுநீர் விடுவதை கட்டுப்படுத்தி, மீண்டும் புனித குளமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior