பண்ருட்டி:
பண்ருட்டி நகர பகுதியின் நகராட்சி அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பண்ருட்டி நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பு :-
பண்ருட்டி நகர பகுதியில் விற்கப்படும் அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளில் மனைகளை எவரும் வாங்க வேண்டாம். இந்த மனை பிரிவுகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு மற்றும் மழை நீர் வடிகால் வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தி தரப்படமாட்டாது. மேலும், அனுமதி பெறாத மனைகளை வாங்கினால் அதில் வீடு கட்ட நகராட்சி நிர்வாகத்தால் கட்டட அனுமதியும் வழங்கப்படமாட்டாது. இந்த அறிவிப்பையும் மீறி, அனுமதி பெறாத மனைகளை வாங்கி வீடு கட்டினால் அதனை நகராட்சி நிர்வாகத்தால் தடை செய்வதோடு, கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். எனவே பொதுமக்கள் மனைகள் வாங்கும் போது அவை அனுமதி பெற்றவையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக