கடலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் 63 ஆயிரத்து 43 மாணவ,மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்படுகிறதது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மாநில பாடத் திட்டமும், தனியார் பள்ளிகளில் மெட்ரிக் பாட திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருவதால் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனை போக்கிட அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி பாட திட்டத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக நடப்பு கல்வி ஆண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அச்சிட்டு அனைத்து மாவட் டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.கடலூர் மாவட்டத்தில் உள்ள 25 ஆயிரத்து 863 முதல் வகுப்பு மாணவர்கள் மற்றும் 37 ஆயிரத்து 180 ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்தது. இதனை அந்தந்த பள்ளிகளுக்கு நேற்று முதல் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை (1ம்தேதி) முதல் சமச்சீர் கல்வி பாட திட்ட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக