கடலூர்:
தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறையில் 30 சதவீதம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறை ஊழியர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நேற்று கடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடந்தது. மாநிலத் தலைவர் கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெரால்டு வரவேற் றார். துணைத்தலைவர்கள் பிரான்சிஸ் சேவியர், சாம்பசிவம் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறையில் 30 சதவீதம் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணி இடங்களை நிரப்ப வேண்டும். வாரிய மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் உள்ள சிக்கலை நீக்க வேண்டும். அனைத்து பதவிகளிலும் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும். கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சட் டம் சீரிய முறையில் அமல் படுத்திட புதிய கட்டமைப்பு உருவாக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் தனசேகரன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக