சிதம்பரம்:
சிதம்பரத்தில் அனைத்து அரிமா சங்கங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், அனைத்து சங்கங்களும் இணைந்து சிதம்பரம் நகரில் மின் மயானம் அமைப்பது, அனைத்து சாலைகளில் இருபுறமும் மரக்கன்றுகள் நடுவது, பள்ளிகளில் சேவை செய்வது என முடிவு செய்யப்பட்டது.
ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.அஷ்ரப்அலி வரவேற்றார். முன்னாள் தலைவர் எஸ்.ஏ.லத்தீப்கான் தலைமை வகித்தார். பொருளாளர் கே.கணபதி முன்னிலை வகித்தார். அரிமா சங்க மாவட்ட கவர்னர் ரத்தினசபாபதி சிறப்புரையாற்றினார். முன்னாள் கவர்னர்கள் ஆர்.எம்.சுவேதகுமார், ஆர்.கேதார்நாதன், டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன், டாக்டர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் பேசினர். கோவில்நகர அரிமா சங்கம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம், சுப்ரீம் அரிமா சங்கம், கோவில் நகர ரோட்டரி சங்கம், அண்ணாமலைநகர் அரிமா சங்கம், சிதம்பரம் நகர ரோட்டரி மற்றும் அரிமா சங்கம் உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக