எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய விண்ணப்பத்தை அளிக்க திங்கள்கிழமை (மே 31) கடைசி நாளாகும். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் விண்ணப்பம், திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுச் செயலர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும். பி.இ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் விண்ணப்பம், திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 1.15 லட்சம் பி.இ. விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. கூடுதல் சிறப்பு கவுன்டர்கள்: பூர்த்தி செய்த பி.இ. விண்ணப்பத்தைப் பெற சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்போது 16 சிறப்பு கவுன்டர்கள் செயல்பட்டு வருகின்றன. கடைசி நாளான திங்கள்கிழமை ஏராளமான மாணவர்கள் விண்ணப்பத்தை அளிக்க வசதியாக, மேலும் 4 கூடுதல் சிறப்புக் கவுன்டர்கள் திறக்கப்படும். பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஜூன் 15-ம் தேதி சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படும்; ஜூன் 18-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 28-ம் தேதி கவுன்சலிங் தொடங்கும் என்று துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக