புவனகிரி:
கடலூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என சமாஜ்வாடி மாவட்ட மாணவர் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சமாஜ்வாடி கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட மாணவர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புவனகிரியில் நடந்தது. மாவட்ட மாணவர் பிரிவு செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். அருண்குமார், ஜெயகாந்தன், ராமலிங்கம், செந்தில் குமார், சீனுவாசன், ஜெயக் குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பேரவை செயலாளர் ரங்கராஜன் வரவேற்றார். கட்சியின் மாநில செயல் தலைவர் இளங்கோயாதவ் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கடலூர் மாவட்டத்தில் சட்ட கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும். அரசு நிர்ணய கட்டணத் திற்கு மாறாக நன்கொடை வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். இன்ஜினியரிங் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக