உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

கொலை, கொள்ளை வழக்கில் சிக்கியவரிடம் 20 சவரன் நகை மீட்பு: மேலும் ஒருவர் கைது

குறிஞ்சிப்பாடி :

                 மூன்று மாவட்டங்களில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட தில்லைநாதனிடம் இருந்து 20 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப் பாடி அடுத்த வேலவிநாயகர்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவரது வீட்டில் கடந்த 31ம் தேதி இரவு கையில் கம்பியுடன் நுழைந்த மர்ம நபரை அப்பகுதி மக்கள் பிடித்து குறிஞ்சிப்பாடி போலீசில் ஒப்படைத் தனர்.போலீஸ் விசாரணையில், அவர் மேல்புவனகிரி கள்ளிக்காட்டுத் தெருவை சேர்ந்த தில்லைநாதன் (28) என்பதும், இவர் சிதம் பரம், மீன்சுருட்டி, சீர்காழி பகுதிகளில் 10க்கும் மேற் பட்ட இடங்களில் இரவு நேரத்தில் ஆண்கள் இல்லாத வீட்டில் புகுந்து பெண்களை தாக்கி நகைகளை கொள்ளை அடித்தது தெரிய வந்தது.

                         புவனகிரியில் இரண்டு ஆண்டிற்கு முன் நடந்த திருட்டு வழக்கில் கைதாகி, சிறை தண்டனைக்கு பின் கடந்த ஜூலை மாதம் வெளியே வந்தார். பின்னர் நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த தென் பாதி கிரா மத்தில் பாண்டியன் வீட்டில் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி தவமணி, மகன் கள் சீயேன்ராஜ், சாலமன் ராஜ், தாய் மல்லிகா ஆகியோரை இரும்பு பைப்பால் தாக்கி விட்டு நான்கு சவரன் நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள் ளார்.தில்லைநாதன் தாக்கியதில் தவமணி, அவரது மகன் சீயோன்ராஜ் (4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர்.அதன்பிறகு அரியலூர் மாவட்டம் வடவாறு தலைப்பு கிராமத்தில் புகழேந்தி, தென்னவநல் லூரில் பொய் யாமொழி, புத்தூரில் டேனியல்ரால் ஆகியோரின் வீடுகளில் அடுத்தடுத்து புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்களை தாக்கி நகைகளை கொள்ளை அடித் துள்ளார்.

                       இந்த நகைகளை அணைக்கரையை சேர்ந்த நடராஜனுடன் சேர்ந்து விற்று செலவு செய்து வந்த தில் லைநாதன், சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் புவனகிரிக்கு வந்துள்ளார். அங்கு இரவு நேரத்தில் சினிமா பார்த்துவிட்டு வந்த பெண்ணை கற்பழித் ததும், இதேபோன்று பல பகுதிகளில் இரவில் தனியாக வந்த பெண்களை கற்பழித்துள்ளது தெரிய வந்துள்ளது.அதன்பேரில் குறிஞ்சிப் பாடி போலீசார் வழக்கு பதிந்து தில்லைநாதனை நேற்று கைது செய்தனர்.அவர் கொள்ளை அடித்து விற்ற 20சவரன் நகைகளை பறிமுதல் செய் தனர். மேலும், இவ ருக்கு உடந்தையாக இருந்த நடராஜனை கைது செய்தனர்.இவர்களிடம் சீர்காழியில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து நாகை மாவட்ட போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior