ஸ்ரீமுஷ்ணம் :
ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கள்ளிப்பாடி வெள்ளாற் றில் அரசு மணல் குவாரி இயங்கியது. கடந்த மாதம் பெய்த கனமழையில் ஆற் றில் தண்ணீர் வரத்து துவங் கியதால் குவாரி மூடப் பட் டது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந் துள்ள நிலையில் அனுமதியின்றி பலர் மணல் எடுத்து செல்கின்றனர்.
அதனையொட்டி மணல் குவாரியை மீண் டும் திறப்பதற்காக பொதுப்பணி துறை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை கள்ளிப்பாடி கிராமத்திற்கு சென்று மணல் அள்ள அனுமதி வழங்குவதற்காக அறிவிப்பு பலகை வைத்தனர்.இதனை அறிந்த கள் ளிப்பாடி மற்றும் காவானூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு, கள்ளிப்பாடி ஆற் றில் காவனூருக்கு செல் லும் வழியில் மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சவார்த்தை தடத்தினர். அப்போது கிராம மக்கள் கள்ளிப்பாடியிலிருந்து காவானூர் கிராமத்திற்கு செல்லும் வழியை தவிர வேறு பகுதியில் மணல் எடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றனர். இதன்பின்னர் கள்ளிப்பாடி கிராமத்தில் மணல் அள்ளுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து குவாரியை துவக்குவது குறித்து முடிவு செய்வதாக அதிகாரிகள் அறிவித்தனர். அதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக