ராமநத்தம் :
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மங்களூர் ஒன்றியத்தில் சிறப்பாக செயல்படுவதாக உலக வங்கி குழுவினர் பாராட்டியுள்ளதாக மாவட்ட திட்ட அலுவலர் பேசினார். ராமநத்தத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்க மேம்பாட்டிற்கு நிதி வழங் கும் விழா நடந்தது. ராமநத்தம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்கள் அரங்கூர் அமுதா, எழுத் தூர் ராமலிங்கம், இடைச் செருவாய் ஜெயமணி, தச்சூர் சந்திரா, ஆக்கனூர் இந்திராகாந்தி முன்னிலை வகித்தனர். தொழுதூர் பிரிவு அணி தலைவர் ராஜா வரவேற்றார்.
தொழுதூர் பிரிவைச் சேர்ந்த 10 ஊராட்சிகளுக்கு வறுமை ஒழிப்பு நிதியை வழங்கிய வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட அலுவலர் நித்தியானந்தம் பேசியதாவது: வட்டத்தில் இந்த ஆண்டிற்கு வாழ்ந்து காட் டுவோம் திட்டத்திற்கு கீரப்பாளையம் ஒன்றியத்தை தேர்வு செய்ய இருந்தது. அப்போதை கலெக்டர் ராஜேந்திர ரத்னு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தொகை, எஸ்.சி., எஸ்.டி., மக்கள் தொகையை கணக்கெடுத்து திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினார். அதன்படி இத்திட்டம் மங் களூர் ஒன்றியத்தில் செயல் படுத்தப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்த ஒன்றியத்தில் இத்திட்டம் சிறப்பாகவும், விவேகமாகவும் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
மேலும், தமிழகத்திலேயே மங்களூர் ஒன்றியத்தில் வறுமை கோட் டிற்கு கீழ் உள்ள மக்களை தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி மாநிலத்திலேயே முதன்மை ஒன்றியமாக மாற்றிடும் வகையில் இங் குள்ளவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.சில தினங்களுக்கு முன் உலக வங்கியில் இருந்து 8 குழுக்கள் தமிழகத்தில் உள்ள ஒன்றியங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்து ஆய்வு செய்தனர். அதில் கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் கறவை மாடு உள்ளிட்டவைகளுக்காக கடன் பெறுவதை விட, காளான் வளர்ப்பு, இயற்கை எரு தயாரிப்பு, கவரிங் நகை, களிமண் பொம்மைகள் தயாரிப்பு உள்ளிட்ட புதிய தொழில் துவங்க முன்வர வேண்டும் என்றார். விழாவில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணபவன், ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் வள்ளி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக