கடலூர்:
பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 3ஜி சேவை தொடர்பான டெண்டரை இறுதி செய்வதில், காலதாமதம் செய்வதன் மூலம் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன. ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் இளங்கோவன், ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் மதியழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க தென்மண்டல பொதுச் செயலாளர் சுவாமிநாதன் சிறப்புரை நிகழ்த்தினார். பி.எஸ்.என்.எல். அலுவலர் சங்க மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்லப்பா, அலுவலர்கள் சங்க உதவிச் செயலாளர் பி.கே.பெரியசாமி உள்ளிட்டோர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக