கடலூர் :
தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள்-விவசாயிகள் சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உறுப் பினர் அடையாள அட்டையில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு உதவிடும் பொருட்டு கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூக பாதுகாப்பு நலத்திட் டத்தை அறிவித்தது.இத்திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு திருமணம், விபத்து மரணம், விபத்தில் உடல் உறுப்புகள் இழப்பு, இயற்கை மரணம், ஈமச்சடங்கு மற்றும் உறுப்பினரின் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகங்களில் விண் ணப்பித்தனர்.
அந்த மனுக்கள் மீது வருவாய் துறையினர் விசாரணை நடத்தி தகுதியுள்ளவர்களுக்கு விவசாய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.இந்த அடையாள அட்டையில் குடும்ப தலைவரின் பெயர், வயது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரம், அவர்கள் குடும்ப தலைவருக்கான உறவு முறையை குறிப்பிட்டு தாசில்தார் கையெழுத்துடன் கூடிய முத்திரை இடப்பட்டிருக்க வேண்டும்.கடலூர் அடுத்த ஆலப் பாக்கத்தில் வழங்கியுள்ள பல அடையாள அட்டைகளில் தாசில்தார் கையெழுத்து இல்லை. மேலும் சில அட்டைகளில் குடும்ப உறுப்பினர்களின் உறவு முறைகள் குறிப்பிடாமல் காலியாக விடப்பட் டுள்ளது.இதனை அறியாத உறுப் பினர்கள், அரசின் நலத் திட்ட உதவிகளை பெற் றிட தங்களது அடையாள அட்டையை எடுத்து சென்றால் அதில் தாசில்தார் "சீல்' இல்லை, குடும்ப உறுப்பினர்களின் உறவு முறை இல்லை, இது போலி கார்டு என கூறி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் விவசாய நலத் திட்ட அட்டை வைத்துள்ளவர்கள் அதற்கான பலனை அடைய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக