ராமநத்தம் :
ராமநத்தம்- லட்சுமணபுரம் இடையே குண்டும் குழியுமாக உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.ராமநத்தம்-லட்சுமணபுரம் சாலையை தொழுதூர், ஆலத்தூர், கீழக்கல்பூண்டி, வடகராம்பூண்டி, கொரக்கவாடி, கண்டமத்தான், பட்டாக்குறிச்சி, ஒரங்கூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவாளந் துறை, காரியானூர், வெள்ளுவாடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இப்பகுதியினர் போக்குவரத்து வசதி பெறும் வகையில் திட்டக்குடி- ஆத்தூர், சின்னசேலம், நயினார்பாளையம், விருத்தாசலம்-லட்சுமணபுரம், திட்டக்குடி-லட்சுமணபுரம், ராமநத்தம்-கொரக்கவாடி, ஒரங்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு, தனியார் மற்றும் மினி பஸ்கள் இயக் கப்பட்டு வருகிறது.போக்குவரத்துக்காக பயன்படுத் தும் சாலையில் ஆலத்தூர், மேலக் கல்பூண்டி, வடகராம்பூண்டி, கொரக் கவாடி ஏரிகளின் கரைகளை பயன்படுத்த வேண்டி உள்ளது.
இந்த ஏரிக்கரைகளில் எதிரெதிரே வாகனங்கள் வந்தால் ஒதுங்கிட போதிய இடம் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் செல்ல வேண்டி உள்ளது.ராமநத்தம்-மேலக்கல்பூண்டி ஏரிக்கரை வரையில் கடந்த ஓராண் டுக்கு முன் பல லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டது. தரமற்ற இந்த சாலை சில மாதங்களிலேயே குண்டும் குழியுமாக மாறியது. தற்போது ஒரு சில இடங்களில் மண் சாலை போன்று தோற்றம் அளிக்கிறது.இந்நிலையில், வடகராம்பூண்டி- கொரக்கவாடி வரை உள்ள 3 கி.மீ., சாலையை சீரமைக்க நான்கு மாதங்களுக்கு முன் ஜல்லி கற்கள் கொட் டப்பட்டது. ஆனால் இன்னும் பணி துவங்கவில்லை.
சாலையோரத்தில் ஜல்லி கொட்டியுள்ளதால், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் தடுமாறி விழுந்து செல்லும் நிலை உள்ளது.பொதுமக்கள், பயணிகளின் நலன் காக்க ராமநத்தம்- லட்சுமணபுரம் இடையேயான சாலையை விரைவில் சீரமைக்கவும், ஏரிக்கரைகளில் உள்ள சாலையை அகலப்படுத்தி வாகன விபத்து ஏற்படாமல் தடுத் திட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக