
சிறுபாக்கம் :
சிறுபாக்கம், வேப்பூர் பகுதி மஞ்சள் பயிர் விவசாயிகள் விலை உயர்வினால் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் தங்களது நீர்ப்பாசன நிலங்களில் கோ- 1, நாட்டு ரகம், எறுமதளி, ஈரோடு- 5 உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக குவிண்டாலுக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விலைபோனது. நல்ல விலை கிடைத்த போதிலும், மஞ்சள் பயிரில் போதிய மகசூல் கிடைக்கவில்லையே என விவசாயிகள் ஆதங்கப்பட்டு வந்தனர். இருப்பினும் இந் தாண்டு இப்பகுதி விவசாயிகள் பலர் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது மஞ்சள் குவிண்டால் 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் பகுதியில் மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக