உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

நெல் பயிரில் புகையான் தாக்குதல் இழப்பீடு வழங்க கோரிக்கை

கடலூர் :

            புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சம்பா நெல் விளை நிலங்களுக்கும் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

             கடலூர் மாவட்டத்தில் 2.60 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விதை நெல்லில் கலப்படம் காரணமாக உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியாத நிலையும், அறுவடை செய்த நெல் தரம் குறைந்துள்ளதால் அதிக விலைக்கு விற்க முடியாமால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இந்நிலையில் நெற்பயிரில் குருத்துப்புழு மற்றும் புகையான் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளை வாங்கிய பயன்படுத்தியதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

                  இருப்பினும் சாகுபடியில் 50 சதவீதம் மகசூல் குறையும் நிலை உள்ளதால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் 10 முதல் 15 நாட்களில் அறுவடை துவங்க உள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு பயிர் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் நடப்பாண்டு அறுவடை மகசூல் பரிசோதனையின் போது புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior