நடுவீரப்பட்டு :
நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் "சைக்கிள் ஷெட்' இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங் களை சேர்ந்த 1,360 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களின் வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் அதிக தூரம் இருப்பதால் மாணவ, மாணவிகள் அதிகளவில் சைக்கிளில் வந்து செல் கின்றனர். இவர்களில் பலருக்கு அரசு சார்பில் இலவச சைக்கிளும் வழங்கப் பட்டுள்ளது.மாணவ, மாணவிகள் ஓட்டி வரும் சைக்கிள் களை நிறுத்த பள்ளியில் போதிய ஷெட் இல்லாததால் வெயில் மற்றும் மழைகளில் நிறுத்தப்பட்டு சைக்கிள்கள் வீணாகி வருகிறது. வெயிலில் சைக்கிள் நிற்பதால் மாலையில் காற்று இறங்கி விடுகிறது.
இதனால் மாணவ, மாணவிகள் மாலை பள்ளி விட்டதும் சைக்கிளை தள்ளிக் கொண்டு காற்று அடிக்க சைக்கிள் கடைகளை தேடி அலைவது வாடிக்கையாக உள்ளது. இதனை தவிர்த் திட பள்ளியில் மாணவர்களின் சைக் கிள்களை நிறுத்த ஷெட் அமைத்து தர கல் வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக