பண்ருட்டி :
பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் உட்கார இடமில்லாமல் தரைக் கடை ஆக்கிரமிப்பாளர்கள் சந்தைபோல் வியாபாரம் செய்து வருகின்றனர்.பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் காத் திருக்கும் நிழற்குடை பகுதியை ஆக்கிரமித்து தரைக் கடை வைத்துள்ளனர்.இதனால் பயணிகள் உட்காருவதற்கும், நிற்பதற்கும் இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். கோடை காலங்களில் பயணிகள் பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது.ஆக்கிரமிப்பாளர்கள் பலா, வாழை, கொய்யாப் பழம் மற்றும் மணிலா பயிர்,வெள்ளரிபிஞ்சு ஆகியவற்றை விற்பனை செய் கின்றனர். இந்த கடைகளில் இருந்து கொட்டப்படும் பழ கழிவுகளை சாப்பிடுவதற்கே 35க்கும் மேற் பட்ட மாடுகள் பஸ் நிலையத்தில் சுற்றி வருகின்றன.
பஸ்நிலையத்திற்குள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், சரக்குலாரிகள், வேன்கள், கார்கள், டூரிஸ்ட் வேன்கள் உள் ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.வெயிலுக்காக நிழற் குடையில் ஒதுங்கி நிற்கும் பயணிகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் திட்டுகின்றனர். பஸ்நிலையத்தில் தரைக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. கடந்த ஆண்டு சென்னை நகராட்சி நிர் வாக கூடுதல் ஆணையர் பஸ்நிலையத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவிட்டார். அந்த உத்தரவை சில நாட் கள் மட்டுமே நகராட்சியினர் செயல்படுத்தினர். பின் வழக்கம் போல் மீண் டும் ஆக்கிரமிப்பு துவங்கியது. பஸ்நிலையத்தின் அவலம் குறித்து உள் ளாட்சி பிரதிநிதிகள் முறையிட்டும், நகராட்சி நிர்வாகம் கண்டும், காணாமல் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக