கடலூர் :
கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, திருவள்ளுவர் பல்கலைக் கழக பதிவாளர் நேற்று நேரில் விசாரணை நடத்தி மையத்திற்கு "சீல்' வைத்தார்.
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் செமஸ்டர் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 22ம் தேதி முதல் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்தது. இப்பணியில் 162 ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் காலை அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஆசிரி யர்கள் ஏற்கனவே நடந்த பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர் தேர்தலில் தங்களுக்கு எதிராக ஓட்டு சேகரித்த கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வரை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.இதனால் கல்லூரி முதல்வருக்கும், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்றும் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்த ஆசிரியர்கள், தேவனாம்பட்டி னம் அரசு கலைக் கல்லூரிக்கு சென்றனர்.
இதற்கிடையே திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் அமல்தாஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற் றும் விடைத்தாள் திருத்தும் மையமான செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களில் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு இன்று வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக் கழக துணைவேந் தரை சந்திப்பது எனவும், அதன் பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. பின் பதிவாளர் அமல்தாஸ் முன்னிலையில் விடைத்தாள் திருத்தும் மையம் சீல் வைக்கப்பட்டது. விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கல்லூரிக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டனர்.
கல்லூரி சார்பில் மனு: செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியர்கள் ரோசாரியோ, சின்னப்பன், ஜெயந்திரவிச்சந்திரன் ஆகியோர், பல்கலைக்கழக பதிவாளரிடம் அளித்துள்ள மனுவில் "பேராசிரியை உஷா ரகோத்தம் தூண்டுதலின் பேரில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு ஆர்ப்பாட் டமும் நடந்தது. எங்கள் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண் டும் என்ற ஒரே நோக்கத்தில் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று விடைத்தாள் திருத்தும் மையத்தை எக்காரணம் கொண்டு மாற்றக்கூடாது' என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சுயநிதிக் கல்லூரிகளை சேர்ந்த 180 பேராசிரியர்கள் நேற்று மாலை துணைவேந்தர் ஜோதிமுருகனை சந்தித்து, விடைத்தாள் திருத்தும் பணியில் பிரச்னை ஏற்படுத்திய பேராசிரியர் உஷாரகோத்தம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடைத் தாள் திருத்தும் பணியை மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி மனு கொடுத்தனர். மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக துணைவேந்தர் உறுதியளித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக