கடலூர்:
600 சிமென்ட் மூட்டைகளுடன் லாரியைக் கடத்தியதாக பச்சமுத்து (27) வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
பெண்ணாடம் அருகில் உள்ள சிமென்ட் தொழிற்சாலையில் இருந்து 600 சிமென்ட் மூட்டைகளுடன், அரியலூர் மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த டிரைவர் செல்வம் (41), கிளீனர் மணிகண்டன் ஆகியோர் வியாழக்கிழமை மாலை பெரியகுளம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர்.÷வழியில் திட்டக்குடி வெள்ளாற்றங் கரையில் லாரியை நிறுத்திவிட்டு, இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது, லாரியை ஒருவர் கடத்திச் சென்று விட்டாராம். லாரி மற்றும் சிமென்ட் மூட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.10.60 லட்சம்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திட்டக்குடி போலீஸôரிடம் சிமென்ட் மூட்டைகளுடன் லாரி பிடிபட்டது. லாரியை கடத்தி வந்த திட்டக்குடி இளமங்கலத்தைச் சேர்ந்த ராசுநயினார் மகன் பச்சமுத்து கைது செய்யப்பட்டார். அவர் இதே லாரி நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் டிரைவராக வேலை பார்த்தவர் என்று கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக