உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

ஊராட்சிகளில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

கடலூர்: 

                கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ள 406 ஊராட்சிகளில், பொங்கல் தினத்தன்று விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

   ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

            கடந்த 3 ஆண்டுகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 406 ஊராட்சிகளில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பொங்கல் திருநாளன்று 406 ஊராட்சிகளிலும், இளைஞர்களுக்கு தனிநபர்களுக்கும்  குழுக்களுக்கும் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். ஆண், பெண் இருபாலருக்கும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், சதுரங்கம், கேரம், 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், வாலிபால், டென்னிக்காய்ட் ஆகிய போட்டிகள் இடம்பெறும்.  போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்து கொண்டவர்களுக்கு 10-ம் தேதி வரை முன்னோடிப் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதிப் போட்டிக்கு வீரர்கள் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதிப் போட்டிகள் பொங்கலன்று நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவரைத் தொடர்பு கொள்ளலாம்.   விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior