சிதம்பரம் :
சிதம்பரத்தில் விபத்துக் கான நஷ்ட ஈடு வழங்காத இரண்டு அரசு விரைவு பஸ்கள் ஜப்தி செய்யப் பட்டன. சிதம்பரம் அடுத்த நங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சாலையில் நடந்து சென்றபோது கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் மோதி இறந்தார். அவரது மனைவி சாந்தி இழப்பீடு கோரி சிதம்பரம் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமி, கணேசமூர்த்தி குடும்பத்திற்கு இழப்பீடாக 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை விரைவு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என கடந்த 2004ம் ஆண்டு தீர்ப்பு கூறினார். ஆனால் இதுவரை விரைவு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. அதே போன்று மற்றொரு விபத்தில் காயமடைந்த கலையரசி என் பவருக்கும் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை.
இதுகுறித்து சாந்தி மற்றும் கலையரசி ஆகியோர் சிதம்பரம் விரைவு கோர்ட்டில் முறையீடு செய்தனர். அதன்பேரில் நீதிபதி தேவசகாயம் (பொறுப்பு) விசாரணை நடத்தி, நஷ்ட ஈடு வழங்காத விரைவு போக்குவரத்து கழக பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டர். அதன்பேரில் நேற்று சிதம்பரத்தில் பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசு விரைவு போக்குவரத்து பஸ்கள் இரண்டையும் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் நிறுத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக