பண்ருட்டி:
அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்கவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் சக்கரத்தாழ்வாரை, ஊராட்சி அலுவலகத்தில் பூட்டி சிறை பிடித்த சச்சிதானந்தத்தின் மீது பண்ருட்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்கவரப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரத்தாழ்வார். இவர் உறுப்பினர்களுடன் ஊராட்சி மன்றக் கட்டடத்தில் வியாழக்கிழமை மாதாந்திரக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, கீழ்கவரப்பட்டு காலனியைச் சேர்ந்த சச்சிதானந்தம் என்பவர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனக்கூறி மன்றக் கட்டடத்தை பூட்டி தலைவர் மற்றும் உறுப்பினர்களை சிறை பிடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பண்ருட்டி போலீஸôர் விரைந்து சென்று சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரத்தாழ்வார் கொடுத்த புகாரின் பேரில், சச்சிதானந்தத்தின் மீது பொது இடத்தில் அசிங்கமாக திட்டுதல், சட்ட விரோதமாக அடைத்து வைத்தல் பிரிவில் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக