உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

குரங்குகள் அட்டகாசம்: குமுறும் கிராம மக்கள்

நெய்வேலி:

               பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த நடுக்குப்பம் கிராமத்தில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக படாதபாடுபடுகின்றனர்.

              பண்ருட்டி வட்டம் வல்லம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட நடுகுப்பம் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தில் முந்திரி மற்றும் பலா விளைச்சல் அதிகம் காணப்படுகிறது. இந்த கிராமத்தில் சுற்றித் திரியும் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் இப்பகுதி மக்களுக்கு கொடுக்கும் தொல்லைகள் கொஞ்சம் நஞ்மல்ல. வீட்டின் கூரைகளை பிய்த்துப்  போடுவது, மண்பானையில் வைத்துள்ள தண்ணீரைக் குடிப்பதற்காக பானைகளை கீழே சாய்த்து தண்ணீர் குடிப்பது, வீட்டில் சமைத்து வைக்கப்பட்டுள்ள சோற்றுப் பானைகளை தூக்கிக் கொண்டு செல்வது, முந்திரிப் பயிர்களை எடுத்துச்செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கிராமப் பெண்கள் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். ராணி என்ற பெண் கூறுகையில் எங்கள் வீட்டில் இளம் வயது குழந்தைகள் உள்ளனர். இவர்களை வெளியே விளையாடக் கூட அனுப்புவதற்கு பயமாக உள்ளது. சந்தைக்கு சென்று வாங்கி வந்த காய்கறிகளை தூக்கிக் கொண்டு மரத்தில் ஏறிவிடுகிறது.

                   வீட்டின் மேல்பகுதியில் செல்லும் கேபிள்டிவி வயர்களை இந்தக் குரங்குகள் அறுத்துவிடுகின்றன. ஆனால் கேபிள்டிவி உரிமையாளர்கள் எங்களிடம் சண்டையிடுகின்றனர். குரங்குதான் அறுத்தது என்றாலும் நம்ப மறுக்கின்றனர், இதனால் எங்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது என்றார் அஞ்சலை என்ற பெண் மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு பண்ருட்டி சென்று வீடு திரும்பிய போது, வீட்டின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்று உள்ளே சென்று பார்த்தபோது, இட்லிக்கு அரைத்து வைத்திருந்த மாவு, சாம்பார் ஆகியவற்றின் பாத்திரங்களை கீழே தள்ளி, அதில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். குரங்குகளை அடித்தால் பாவம் சேரும் என்பார்கள். ஆனால் அவை செய்யும் சேட்டையை எங்களால் தாங்க முடியவில்லை. எனவே இந்தக் குரங்குகளின் அட்டகாசத்தை அடக்க பண்ருட்டி வட்டாட்சியர், வனத்துறை மூலம் குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior