உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

கடல் அலை சீற்றம் மீன்பிடி தொழில் பாதிப்பு

கடலூர் :

             கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் கடலூரில் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் லேசான மழை துவங்கியது. மதியம் 12 மணிக்கு பலத்த மழை பெய்தது. கடலூர் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, ராசாபேட்டை, சொத்திக்குப் பம், சித்திரைப்பேட்டை, பெரியக்குப்பம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.கடலூர், பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. விசைப் படகுகள், பைபர் படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior