கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 114 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிட்டப்பட்டு உள்ளது. இதில் பொங்கலுக்குள் 60 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விடும் என்றும், ஏனைய கொள்முதல் நிலையங்கள் 20-ம் தேதிக்குள் திறக்கப்படும் என்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.1,050 (மத்திய அரசு விலை ரூ. 930) என்றும், மிகச் சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.1100 (மத்திய அரசு விலை ரூ. 980) அறிவித்து உள்ளது. நெல்லுக்கு விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் அறுவடை ஆகும் அனைத்து நெல்லும் அரசு கொள்முதல் நிலையங்களுக்கே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக