சிதம்பரம் :
சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியலில், 4 லட்சத்து 34 ஆயிரத்து 477 ரூபாய் வசூலாகியிருந்தது; இதுதவிர, வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. சிதம்பரம் நடராஜர் கோவில், பிப்., 2, 2009ல், அறநிலையத் துறை கட்டுப் பாட்டிற்கு கொண்டு வரப் பட்டு, 5ம் தேதி, காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டது. காணிக்கை அதிகரித்ததால், மேலும் ஐந்து இடங் களில் உண்டியல் வைக்கப் பட்டு, நேற்று, ஒன்பது உண்டியல்களும் திறக்கப் பட்டன. அதில், 4 லட்சத்து 34 ஆயிரத்து 477 ரூபாய் வசூலாகியிருந்தது; அத்துடன் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை நாட்டு கரன்சிகள் ஏராளமாக இருந்தன.இக்கோவிலை அரசு ஏற்று, ஓராண்டு நிறைவடைவதற்குள், ஐந்து முறை உண்டியல் திறக் கப்பட்டு, இதுவரை, 12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ரூபாய் வசூலாகியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக