நெய்வேலி:
மரங்கள் அடர்த்தியாக உள்ள நெய்வேலியில் கடுமையான குளிர்க் காற்று வீசுகிறது. நெய்வேலி நகரத்தில் சுமார் பல லட்சம் மரங்கள் உள்ளன. என்எல்சி நகர நிர்வாகத்தின் தோட்டக்கலைத் துறை சார்பிலும், நிறுவனத்தில் சுற்றுச்சூழல் துறை சார்பிலும் பொது இடங்களில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதோடு இல்லாமல் நெய்வேலி நகரில் உள்ள அனைத்துக் குடியிருப்புகளிலும் சராசரியாக 10 மரங்களுக்கு குறையாமல் இருக்கும்.÷எனவே மழைக் காலங்களில் நெய்வேலியில் தொடர் மழை பெய்யும், மார்கழி மாதம் பனிப்பொழிவு அதிகமாக இருப்பின் நெய்வேலியில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும், மாலை 5 மணிமுதல் மறுநாள் காலை 8 மணிவரை குளிர்க்காற்று வீசுவதால் பலரும் கம்பளி ஆடை அணிந்தே வெளியே வருகின்றனர். வெப்ப நிலையைப் பொறுத்தமட்டில் 20 டிகிரிக்கு குறைவாக இருப்பதால், குளிர் நெய்வேலி வாசிகளை வாட்டிவதைக்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இடைவிடாமல் கனமழை பெய்ததால் குளிரின் தாக்கம் வழக்கத்தைவிட கூடுதலாகவே இருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக