உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

காப்பீட்டு திட்டத்தில் 1.23 கோடி'ஸ்மார்ட் கார்டு : அமைச்சர் பன்னீர்செல்வம்தகவல்

கடலூர்:

                       கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு பெற் றுள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.23 கோடி குடும்பங்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித் துள்ளார்.கடலூர் அடுத்த புதுச் சத்திரத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். துணை பதிவுத்துறை தலைவர் சுந்தரேசன், பரங்கிப்பேட்டை ஒன்றிய சேர்மன் முத்துபெருமாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பதிவாளர் (பொறுப்பு) வேலாயுதம் வரவேற்றார். பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்த வைத்து, வில்லியநல்லூர் ஊராட்சியை சேர்ந்த 1040 குடும் பங்களுக்கு இலவச கலர் "டிவி' வழங்கிய 

 அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

                    கடந்த ஆட்சியில் 40 பத்திரப் பதிவு அலுவலங்கள் மூடிபட்டன. அதனை தற்போது தி.மு.க., அரசு லாப நஷ்ட கணக்கு பாராமல் மக்கள் நலன் கருதி திறந்து வருகிறது. அதில் இன்று திறக்கப்பட்டுள்ள புதுச்சத்திரம் அலுவலகம் மூலம் குள்ளஞ்சாவடி, பரங்கிப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 15 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக 385 வாகனங்கள் வழக்கப்பட்டன. இதன் மூலம் மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 16 பேர் பயனடைந்துள்ளனர். 81 ஆயிரம் பிரசவங்கள் நடந்துள்ளது. இந்த சேவை மூலம் பல உயிர் கள் காக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்சிற்கான அழைப்பு அதிகரித்து வருவதால் வரும் ஆண்டில் 200 ஆம்புலன்ஸ் தேவை என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆம்புலன்ஸ் சேவை, விவசாய கடன் தள்ளுபடி, இலவச "டிவி' உள்ளிட்ட பல திட்டங்கள் கட்சி பாகுபாடின்றி செயல்படுத்தி வருவதால் அ.தி.மு.க.,வினர் மத்தியிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு இதுவரை 148.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. புகைப் படம் எடுக்கப்பட்ட 1.44 கோடி குடும்பங்களில் 1.23 கோடி குடும்பங்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கப் பட்டுள்ளது.

                    இளம் சிறார் கண் ணொளி வழங்கும் திட்டத்தில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 968 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட் டுளளது. இது போன்று பல்வேறு சிறப்பான திட் டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் கருணாநிதியின் அரசிற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். மாவட்ட பதிவாளர் (தணிக்கை) ஜெயவேலு நன்றி கூறினார்.விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, ஒன்றிய கவுன்சிலர் அம்சாயள், வில்லியநல்லூர் ஊராட்சி தலைவர் ராசாயாள், ஆத்மா விவசாய குழு உறுப்பினர் ராஜாராமன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior