உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

உற்பத்தி அதிகரிப்பால் செங்கல் விலை குறைந்தது! சூளை பணியாளர்களுக்கு கூலி கிடு, கிடு


பண்ருட்டி : 

                        பண்ருட்டி பகுதியில் செங்கல் உற்பத்தி அதிகரிப்பால் செங்கல் விலை குறைந்து வருகிறது. பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம், கொக்குப்பாளையம், அங்குசெட்டிப் பாளையம், பணப்பாக்கம், சிறுவத்தூர், மணம்தவிழ்ந்தபுத்தூர், மந்திப் பாளையம், சேமக்கோட்டை, வரிஞ்சிப்பாக்கம், திருவதிகை, ஒறையூர், வீரப்பெருமாநல்லூர், கோட்லாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் தினசரி 20 லட்சம் செங்கல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப் பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல் தரமானதாக உள்ளதால் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கும் இங்கிருந்து தினந்தோறும் 20 லோடு லாரிகள் அனுப்பப்படுகிறது.

                  கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மாவட்டத்தில் சுனாமி குடியிருப்பு கட்டும் பணி அதிகளவில் நடந்ததால் செங்கல் விலை ஏற்றமாக இருந் தது. இதனால் சாதாரண விவசாயிகள் கூட சூளை வியாபாரத்தை ஆரம்பித் தனர்.அப்போது ஆயிரம் செங்கல் 3500 ரூபாய் வரை விலை போனது. ஆனால் கடந்த ஆண்டு சுனாமி குடியிருப்பு பணிகள் முடிவடைந்ததால் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கட்டை சூளை செங்கல் 2500 ரூபாயாகவும், மெலார் சூளை 2,200மாக வீழ்ச்சியடைந்தது. கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் விட்டு விட்டு தொடர் மழை பெய்ததால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதித்தது. இதனால் விறகு கட்டைகள் மூலம் சூளைபோடப்படும் செங்கல் ஆயிரம் 2800 ரூபாயும், சவுக்கு மெலார் சூளை 2400ம் விலை போனது. கடந்த ஒரு மாதமாக மழை அறவே நின்றதால் செங்கல் அறுக்கும் பணி தீவிரமடைந்து சூளைபோடும் பணிகள் அதிகளவில் நடந்து வருகிறது.

                     இதனால் கட்டை சூளை ஆயிரம் கல் 2500 ரூபாயாகவும், மெலார் சூளை கல் 2200மாக குறைந்தது. கடந்த ஆண்டு ஆயிரம் பச்சைக் கல் அறுப்பதற்கு கூலியாக 200ம், கல் அடுக்குவதற்கு 250ம் கூலி இருந்தது.ஆனால் வேலையாட்கள் பற்றாக்குறை காரணமாக கல் அறுப்பதற்கு 225 முதல் 250 ரூபாயும், கல் அடுக்க 275ரூபாயும், 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் இந்த மாதத்தில் செங்கல் விலை மேலும் குறையவாய்ப்பில்லை என சூளை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.இருப்பினும் செங்கல் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தால் ஏப்ரல் மாதத்தில் கட்டை சூளை செங்கல் 2200 ரூபாயும், மெலார் செங்கல் 2000மாக குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior