சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தனி பொறுப்புடன் கூடிய தலைமை கரும்பு அலுவலரை நியமிக்க துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கீரப்பாளையம் ஒன்றிய துல்லிய பண்ணை விவசாயிகள் (கரும்பு) சங்க ஆலோசனை கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்தது. சங்க தலைவர் அப்பாதுரை தலைமை தாங்கினார். சக்திசித்தானந்தம், குணசேகரன் முன்னிலை வகித்தனர். வெங்கடாஜலபதி வரவேற்றார். ரவிச்சந்திரன், தெய்வசிகாமணி, அன்பழகன் பேசினர். பேரூர் உழவர் மன்ற தலைவர் குஞ்சிதபாதம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
எம்.ஆர்.கே., கூட்டுறவு ஆலையிக்கு தனிப் பொறுப்புடன் நிர்வாக திறன்மிக்க தலைமை கரும்பு அலுவலரை நியமிக்க வேண்டும். பணியிடமாறுதலில் முறைகேடாக செயல்பட்ட கரும்பு அலுவலர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். நடப்பு ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்குள் கரும்பு அறுவடை இயந்திரத்தை ஆலை நிர்வாகம் வாங்கி விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக