கடலூர்:
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் புதன்கிழமை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை காலை 8.45 மணிக்கு சில மாணவர்கள் கல்லூரி வாயில் அருகே நின்றிருந்தனர். அப்போது தாவரவியல் பேராசிரியர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த 3-ம் ஆண்டு மாணவர் விநோத்தின் கால் மீது மோட்டார் சைக்கிள் டயர் பதிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கும் பேராசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பேராசிரியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்லூரி வாயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது. பின்னர் கல்லூரி முதல்வர் வந்து பேச்சு நடத்தி மாணவர்களைக் கலைந்து போகச் செய்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக