நடுவீரப்பட்டு:
குடிசை வீடுகளை கான் கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் அதிகம் பயனடைய உள்ளதாக எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசினார்.
நடுவீரப்பட்டு ஊராட்சியில் இலவச "டிவி' வழங் கும் விழா நடந்தது. ஒன் றிய கவுன்சிலர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். தாசில்தார் தட்சணாமூர்த்தி வரவேற்றார்.
பயனாளிகள் 1068 பேருக்கு இலவச "டிவி'க்களை வழங்கி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசியதாவது:
தமிழக அரசு சொன்னதைதான் செய்கிறது. துணை முதல்வர் உத்தரவின் பேரில் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவச "டிவி' வழங்கப் பட்டுள்ளது. நடுவீரப் பட்டு ஊராட்சியில் 32 லட் சம் மதிப்பில் "டிவி'க்கள் வழங்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றதும் வரும் முன் காப்போம் திட்டம், 108 ஆம்புலன்ஸ் வசதி, பள்ளி மாணவர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டம், இருதயம் காப்போம் திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தினார். தற் போது குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள் ளது.இந்த திட்டத்தில் மாநிலத்தில் அதிக குடிசைகள் உள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் தான் பயனடைய உள்ளது. தற்போது 3 லட்சம் வீடுகளுக்கு கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நடுவீரப்பட்டு- சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் 1.35 கோடி ரூபாய் மதிப்பில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. சில நாட்களில் பாலம் திறக்கப்பட உள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த ஆட்சி செய்து வருகிறது என்றார். விழாவில் மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீ மதி, ஒன்றிய கவுன்சிலர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், பத்மநாபன், வருவாய் ஆய் வாளர் வேணி, கடலூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் ஜெயபால், மாவட்ட பிரதிநிதி அண் ணாதுரை, கிளை செயலாளர்கள் கணேசன், சம்மந்தம், ஞானசேகர், குருராஜன் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக