உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

ரூ.200 கோடி செலவில் திட்டம் ​ திருப்பூர் சாயப் பட்டறைக் கழிவுகளை கடலூர் கடலில் கலக்க எதிர்ப்பு

கடலூர்,:

                    ரூ.200 கோடி செலவில்,​​ திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளை கடலூர் கடலில் கலக்க முடிவு செய்து இருப்பதற்கு,​​ கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.​ ​​ 

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் புதன்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:​ ​​ 

                    மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் திருப்பூர் சாயப்பட்றைக் கழிவுகளை சுத்திகரிப்பதற்கு ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.​ கழிவுநீரைச் சுத்திகரிக்க ரூ.200 கோடி ஒதுக்கியதற்கு ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறனுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.​ ​ ​ 

                              ஆனால் அந்தக் கழிவுகளை அகற்றும் இடமாகக் கடலூரைத் தேர்ந்து எடுத்ததற்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.​ ​​ கடலூரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஏற்கெனவே கடலூர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.​ புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் 20 பேரில் ஒருவர் கடலூரைச் சேர்ந்தவராக இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.​​ ​ புளோரோஸிஸ் என்ற பல் மற்றும் எலும்பு வியாதி தமிழகத்தில்,​​ கடலூரில்தான் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.​ கடலூர் மக்கள் சுவாசிக்கும் காற்று மற்ற பகுதிகளைவிட 5 மடங்கு மாசுபட்டு இருக்கிறது.​ ​​ தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட நகரங்களில்,​​ தண்ணீர் காரத் தன்மையாக மாறியிருக்கும் அல்லது அமிலத் தன்மையாக மாறியிருக்கும்.​ ஆனால் கடலூரில் காரத் தன்மையும்,​​ அமிலத் தன்மையும் காணப்படுவது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.​ ​ ​​ ​ 

                                அதற்கு ரசாயன ஆலைகளே காரணம்.​ பல தொழிற்சாலைகள் தங்களது சுத்திகரிக்க முடியாத ரசாயனத் திரவக் கழிவுகளை நிலத்தில் ரகசியமாக ஆழ்குழாய்க கிணறுகள் அமைத்து,​​ பூமிக்குள் செலுத்துகின்றன.​​ ​ இந்த நிலையில் கடலூரில் மிகப்பெரும் ஜவுளிப் பூங்கா அமைய இருக்கிறது.​ திருப்பூர் மற்றும் கோவைப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் துணிகளைக் கடலூருக்குக் கொண்டு வந்து,​​ ரசாயனங்களைக் கொண்டு பதப்படுத்துதல்,​​ சாயம் தோய்த்தல் உள்ளிட்ட பணிகளை மட்டும் கடலூர் ஜவுளிப் பூங்காவல் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதைக் கண்டிக்கிறோம்.​​ ​ இப்பணிக்காகத் தான் மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.​ ​ இப்போதே கடலூரில் 30 கி.மீ.​ நீளத்துக்கு கடலில் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.​ சாயப் பட்டறைக் கழிவுகளையும் கடலில் கொட்டினால் விளைவுகள் மிகவும் மோசமாகும் என்றும் மனுவில் மருதவாணன் கேட்டுக் கொண்டு உள்ளார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior